
INDIA கூட்டணி கட்சிகளில் சேர்கிறாரா கமல்ஹாசன்? 2024 தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக
செய்தி முன்னோட்டம்
மக்களவைக்கான பொது தேர்தல் அடுத்த வருடம் நடக்க இருக்கும் நிலையில், அதற்கான கூட்டணி பேச்சு வார்த்தையை திமுக இன்று(செப் 25) தொடங்கியுள்ளது.
2024ஆம் ஆண்டு பொது தேர்தல் நடைபெற இருப்பதால், பாஜகவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதற்காக, இந்தியா முழுவதிலும் உள்ள மிக முக்கியமான எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து INDIA என்ற கூட்டணியை சமீபத்தில் ஆரம்பித்தன.
INDIA எதிர்க்கட்சி கூட்டணியை திமுக தான் முன்னின்று தமிழகத்தில் வழிநடத்துகிறது.
மேலும், இந்த INDIA கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று பொது தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியுள்ளது.
டோகிவ்ன்
முஸ்லீம் லீக் கட்சி தலைவர்களுடன் துரைமுருகன் ஆலோசனை
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், திமுக பொது செயலாளர் துரைமுருகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு குறித்து விவாதித்து வருகிறார்.
2019ஆம் ஆண்டில் நடந்த பொது தேர்தலில் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் நவாஸ் கனிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது அவர் அந்த தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாக, விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சிகளுடன் இது குறித்து திமுக விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.