ஈரோடு இடைத்தேர்தல் முன்னிலை குறித்து திமுக தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் முத்துசாமி விளக்கம்
செய்தி முன்னோட்டம்
ஈரோடு இடைதேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று(மார்ச்.,2) காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பெரும் வாக்குவித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 2 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் 25033 வாக்குகளும், அதிமுக 8354 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 2005 வாக்குகளும், தேமுதிக 235 வாக்குகளும் பெற்றுள்ளன.
கடந்த முறை நடந்த தேர்தலில் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருந்த நிலையில், இம்முறை அதனை கடந்து தொடர் முன்னிலையில் உள்ளது காங்கிரஸ்.
இது குறித்து ஈரோடு திமுகவின் தேர்தல் பொறுப்பாளரான அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
அமைச்சர் முத்துசாமி
ஓரிரு இடங்களில் வாக்குகள் கூடவோ, குறையவோ செய்யும்
அமைச்சர் முத்துசாமி கூறியதாவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வித்தியாசம் இப்படியேதான் தொடரும் என்று தோன்றுகிறது என்றும்,
ஓரிரு இடங்களில் வாக்குகள் கூடவோ, குறையவோ செய்யும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், திமுக அரசு மக்களுக்கு செய்த நன்மைகள், திட்டங்கள் பற்றித்தான் எடுத்துரைத்தோம், அதில் மக்களுக்கு திருப்தியும் நம்பிக்கையும் ஏற்பட்டது.
இனி மக்களுக்காக செய்யவுள்ள விஷயங்களையும் எடுத்துரைத்தோம் என்று கூறியுள்ளார்.
திமுக மீதுள்ள நம்பிக்கையும், இளங்கோவன் மற்றும் அந்த குடும்பத்தார் மீதிருந்த நம்பிக்கையும் தான் இந்த பெரும்பாலான நிலைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
திருமகன் ஈவெரா இருக்கும்போதே நானும் அவரும் முதல்வரிடம் கோரிக்கை வைத்து பல பணிகளுக்கு நிதிஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம்.
அதன் பலனாக தான் இந்த முன்னிலை என்றும் ஆவர் தெரிவித்துள்ளார்.