
ஈரோடு இடைத்தேர்தல் - திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை
செய்தி முன்னோட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்றது.
இதில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது.
முதலில் இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 106 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 398 தபால் வாக்குகள் பதிவாகின என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
2000 வாக்குகள் முன்னிலை
பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்
அதன்படி, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 3642 வாக்குகள் பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் தென்னரசு 1414 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதனடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் திமுக, காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் உள்ளதையடுத்து தொண்டர்கள் பட்டாசுவெடித்து வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
இந்த ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.
நடத்தப்பட்ட தேர்தலில் 82,138ஆண் வாக்காளர்களும், 88,037பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினவாக்காளர்கள் 17பேர் என மொத்தம் 1,70,192பேர் வாக்களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.