Page Loader
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை

எழுதியவர் Nivetha P
Nov 20, 2023
12:35 pm

செய்தி முன்னோட்டம்

தேமுதிக கட்சி தலைவரும், சினிமா நடிகருமான விஜயகாந்த் கடந்த 18ம்.,தேதி சென்னை நந்தம்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில், தொடர் இருமல், மார்புசளி காரணமாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தொடர்ந்து 3வது நாளான இன்றும்(நவ.,20)அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்நிலை சீராகவுள்ளது. அவரின் உடல்நிலை மற்றும் உடல் உறுப்பு செயல்பாட்டுகளை கவனிக்கவே ஐ.சி.யூ.வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது' என்று கூறியுள்ளனர். மேலும் அவருக்கு நுரையீரலில் சளி உள்ளதால் சுவாசிக்க சிறிது சிரமம் இருந்தாலும் தாமாகவே அவர் சுவாசிக்கிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

மருத்துவமனை அறிக்கை குறித்த தகவல்