வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 1
செய்தி முன்னோட்டம்
வரலாற்று நிகழ்வு: 72 மணிநேரத்தில் 4000 கொலைகள், கேட்க நாதியில்லாமல் 1 லட்சம் பேர் தங்கள் வீடுகளை இழந்த கதை உங்களுக்கு தெரியுமா?
'1946 கொல்கத்தா கொலைகள்' என்று அழைக்கப்படும் 'நேரடி நடவடிக்கை நாள்' ஆகஸ்ட் 16, 1946இல் நடந்த மிக மோசமான ஒரு படுகொலை சம்பவமாகும்.
1940களில் அகில இந்திய முஸ்லீம் லீக் மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய காட்சிகள் இந்தியாவின் மிகப்பெரும் அரசியல் சக்திகளாக இருந்தன. ஆனால், இரண்டு கட்சிகளுக்கும் ஒத்துப்போகவில்லை.
முஸ்லீம் லீக், 1940 லாகூர் தீர்மானத்திற்கு பிறகு, வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளை 'சுதந்திர மாநிலங்களாக' அமைக்க வேண்டும் என்ற அதன் கோரிக்கை குறித்து குரல் கொடுத்து வந்தது.
ந்ட்ஜ்வ்க்
முஸ்லீம் லீக்கிற்கு காங்கிரஸ் மீது சிறிதளவும் நம்பிக்கை இல்லை
1946 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து இந்தியத் தலைமைக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான திட்டமிடல் மூன்று அடுக்கு கட்டமைப்பாக முன்மொழியப்பட்டது.
அந்த கட்டமைப்பின் படி, இந்திய அரசாங்கம்- மத்திய அரசு, மாகாணங்களின் குழு மற்றும் மாகாணங்கள் என்ற அடிப்படையில் பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முஸ்லீம் லீக்கின் கோரிக்கைகள் "மாகாணங்களின் குழு" என்ற பிரிவில் இடம்பெற இருந்தது.
இந்தியாவின் அப்போதைய இரு பெரும் கட்சிகளும், கொள்கையளவில், இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டன.
ஆனால், முஸ்லீம் லீக்கிற்கு காங்கிரஸ் மீது சிறிதளவும் நம்பிக்கை இல்லை.
அதனால், ஜூலை 1946இல், அந்த திட்டத்திற்கான தனது ஒப்புதலை வாபஸ் பெற்ற முஸ்லீம் லீக், தனி தாயகம் வேண்டும் என்று கோரி ஆகஸ்ட் 16ஆம் தேதி ஸ்ட்ரைக் நடத்தப்படும் என்று அறிவித்தது.