Loading...
Gen Z இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்! நீட் விவகாரத்தில் பதவியை இழந்த தர்மேந்திர பிரதான் பரபரப்பு பேச்சு
தர்மேந்திர பிரதான் ராஜினாமா பின்னணி

Gen Z இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்! நீட் விவகாரத்தில் பதவியை இழந்த தர்மேந்திர பிரதான் பரபரப்பு பேச்சு

எழுதியவர் Sekar Chinnappan
Aug 09, 2026
01:41 pm

செய்தி முன்னோட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து தனது மத்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தர்மேந்திர பிரதான், இரண்டு வாரங்களுக்குப் பிறகு தனது ராஜினாமா குறித்த மௌனத்தை முதன்முறையாக உடைத்துள்ளார். ஒடிசா மாநிலம் சம்பந்தல்பூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தலைமுறையை சேர்ந்த Gen Z இளைஞர்கள் சிலர் சுயநல நோக்கத்திற்காகத் தவறாக வழிநடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு தீர்வு காண்பதற்காகவே தான் விலகியதாகத் தெரிவித்தார்.

பின்னணி

பிரதமர் மோடியைச் சந்தித்து விளக்கிய பின்னணி

மாணவர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் அரசியல் காரணங்களுக்காக மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நேரில் வலியுறுத்தியதாகப் பிரதான் குறிப்பிட்டார்.

"மத்திய அமைச்சர் பதவி என்பது எனக்குத் தன்னாணவத்தின் அடையாளம் அல்ல.

நாட்டின் நலனும் 20 கோடி இளைஞர்களின் எதிர்காலமுமே எனக்கு முக்கியம்" என்று கூறிய அவர், தனது கோரிக்கையைப் பிரதமர் ஏற்றுக்கொண்டு மாணவர் நலனில் நேரடியாகத் தலையிட்டுத் தீர்வு கண்டதாகத் தெரிவித்தார்.

சிபிஐ விசாரணை

ஜூலை 25 ராஜினாமாவும் சிபிஐ விசாரணையும்

கடந்த மே 3 அன்று நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டது.

இருப்பினும் டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்திய தீவிரப் போராட்டங்கள் காரணமாக ஜூலை 25 அன்று பிரதான் பதவி விலகினார்.

தேச விரோத சக்திகள் மாணவர் போராட்டத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கவே தான் விலகியதாக அவர் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

விமர்சனம்

எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்வினையும் விமர்சனமும்

தர்மேந்திர பிரதானின் இந்த விளக்கத்திற்கு பதிலடி கொடுத்துள்ள பிஜு ஜனதா தள கட்சியின் தலைவர்கள், அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது தடிஅடி மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி பாஜக அரசே பிரதானின் பெயரைக் கெடுத்ததாக சாடினர்.

தவறான கல்வித்துறை கொள்கைகளாலேயே 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சூழல் உருவானதாகவும், அதனாலேயே அவர் தனது பதவியை இழக்க நேரிட்டது என்றும் அந்த கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

ADVERTISEMENT