ஆரஞ்சு அலர்ட்டை பொருட்படுத்தாமல் திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம், நேற்று (16.10.2024) இரவு 8.00 மணிக்கு தொடங்கி, இன்று (17.10.2024) மாலை 5.38 மணிக்கு வரை நடைபெறுகிறது. இந்த நேரத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டிருந்தது. இந்த எச்சரிக்கையை அடுத்தே பக்தர்கள், புரட்டாசி பௌர்ணமி தினத்தை கொண்டாட குவிந்தனர். ஆரஞ்சு எச்சரிக்கையையும் மீறி, பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலப் பாதையை சுற்றி அருணாசலேஸ்வரரை வழிபட்டனர். நேற்று இரவு மட்டும் சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ஆரஞ்சு அலெர்ட் விடப்பட்டிருப்பதால், கிரிவலத்திற்கு யாரும் வரவேண்டுமென மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்தும் குறிப்பிடத்தக்கது.