NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்! 
    டெலிவரியின் போது திருடப்பட்ட ஐபோன்கள்

    ஆன்லைன் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்கள்.. போலி ஐபோன்களாக மாற்றிய டெலிவரி பாய்! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 28, 2023
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று (ஏப்ரல் 27), டெலிவரியின் போது ஐபோன்களை திருடி போலி ஐபோன்களை மாற்றியதாக விநியோக நிர்வாகி ஒருவர் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

    அமேசான் நிறுவன பார்சல்களை டெலிவரி செய்து வரும் நிறுவனம் மேட்ரிக்ஸ் ஃபைனான்ஸ் சொல்யூசன்ஸ். அந்நிறுவனத்தில் விநியோக நிர்வாகியாக வேலை பார்த்து வரும் லலித் என்ற இளைஞர் ஆர்டர் செய்யப்பட்ட ஐபோன்களை டெலிவரி செய்யாமல் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்.

    அந்த டெலிவரி நிறுவனத்தின் நிலைய பொறுப்பாளரான ரவி என்பவரே இதைக் கண்டறிந்து காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

    இந்தியா

    திருடப்பட்ட ஐபோன்கள்: 

    ஆன்லைன் தளத்தில் ஆர்டர் செய்யப்பட்ட 10 ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் 1 ஆப்பிள் ஏர்பாட் ஆகியவை லலித்திடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

    அதனைக் கொண்டு சென்ற லலித் ஐபோன்கள் மற்றும் ஏர்பாடை திருடிவிட்டு அதற்கு மாற்றாக போலி ஐபோன்களை வைத்து பேக் செய்துள்ளார்.

    பின்னர், வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறி போலி ஐபோன்கள் அடங்கிய பார்சல்களை தனது சகோதரரிடம் கொடுத்து நிறுவனத்திலேயே ஒப்படைக்கச் செய்துள்ளார்.

    திரும்பி வந்த பார்சல்களை சந்தேகத்தின் பேரில் ரவி பிரித்துப் பார்க்க, உள்ளே போலி ஐபோன்கள் இருப்பதைக் கண்டு காவல்துறையிடம் புகாரளித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து லலித்தின் மீது வழக்குபதிவு செய்து போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆப்பிள்
    அமேசான்
    ஆன்லைன் மோசடி
    வைரல் செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஆப்பிள்

    நாடு முழுவதும் வரப்போகிறது ஆப்பிள் மினி ஸ்டோர்ஸ்;டாடா குரூப்புடன் இணையும் ஆப்பிள் நிறுவனம் தொழில்நுட்பம்
    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான ஆப்பிள் டிவி: விரைவில் எதிர்பார்க்கலாம் புதுப்பிப்பு
    விரைவில் வருகிறது: ஆப்பிள் ஐபோன்களில் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆப்பிள் தயாரிப்புகள்
    சில்லறை விற்பனைக்குத் தயார்; இந்தியாவில் 2 ஆப்பிள் ஸ்டோர்கள் திறப்பு ஆப்பிள் தயாரிப்புகள்

    அமேசான்

    டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்!  பிரிட்டன்

    ஆன்லைன் மோசடி

    வருமான வரி தாக்கல் செய்பவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி.!  ஆன்லைன் புகார்
    மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!  செயற்கை நுண்ணறிவு
    டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்கள்.. எச்சரிக்கும் விவிஃபை நிறுவன CEO!  கடன்
    யூடியூபின் பெயரில் மின்னஞ்சலில் மோசடி.. பயனர்களே உஷார்!  கூகுள்

    வைரல் செய்தி

    8 ஆண்டுகளாக கணவரை 'அண்ணா' என அழைத்த பெண் - வைரல் வீடியோ  ட்ரெண்டிங் வீடியோ
    நான் அழகு என்று உறுதியாக நம்ப பல ஆண்டுகள் ஆனது - பிரபல பாலிவுட் நடிகை கோலிவுட்
    2023ஆம் ஆண்டின் மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் நந்தினி குப்தா! யார் அந்த நந்தினி? இந்தியா
    குந்தவைக்கும், அருள்மொழிக்கும், ட்விட்டர் நிறுவனம் வைத்த ஆப்பு த்ரிஷா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025