Page Loader
சாலையில் நிர்வாணமாக பல வரை காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி - டெல்லியில் பயங்கரம்
காரில் இழுத்துச்செல்லப்பட்ட இளம்பெண்

சாலையில் நிர்வாணமாக பல வரை காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பலி - டெல்லியில் பயங்கரம்

எழுதியவர் Nivetha P
Jan 03, 2023
04:13 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியை சேர்ந்த 20 வயது அஞ்சலி சிங் என்னும் இளம்பெண் நேற்று முன்தினம் இரவு பணிநிமித்தமாக இரவு தனது ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது கஞ்சவாலா என்னும் பகுதியில் அவர் சென்றியிருக்கும் பொழுது 5பேர் கொண்ட பலேனோ காரின் முன்சக்கரத்தில் அவரது ஆடை சிக்கி விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் இருந்தோர் மதுபோதையில் இருந்ததால் காரை நிறுத்தாமல் சென்றுள்ளார்கள். அஞ்சலியின் உடல் காரில் சிக்கியபடி ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக கிட்டத்தட்ட 14 கி.மீ.வரை இழுத்து செல்லப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் டீ கடை வைத்துள்ள தீபக் டாகியா என்பவர் பார்த்து போலீசில் தகவல் அளித்துள்ளார். இந்நிலையில் 4 கி.மீ. தூரம் கொண்ட அந்த சாலையில் அந்த கார் 4-5 முறை முன்னும் பின்னும் வந்து சென்றுள்ளது.

கார் நம்பரை வைத்து 5 பேரை கைது செய்த போலீஸ்

"இது என்ன வகையான விபத்து?" - கதறி கேள்வி எழுப்பிய அஞ்சலியின் தாயார்

இதையடுத்து, சுல்தான்புரி என்னும் இடத்தில் ஒரு பெண்ணின் உடல் நிர்வாணமாக கிடப்பதாக போலீசுக்கு தகவல் வர, அங்கு விரைந்த போலீசார் அஞ்சலியின் உடலை மீட்டனர். ஆனால் அஞ்சலியின் உடலில் தீவிரமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, அவரது உடல் பாகங்கள் கிழிந்து தொங்குகிறது என்று போலீஸார் கூறியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காரின் நம்பரை வைத்து அந்த 5 நபரை போலீசார் கைது செய்தனர். அவர்கள், "எங்களுக்கு எதுவும் தெரியாது. காரில் பாட்டு போட்டிருந்ததால் விபத்து நடந்ததே எங்களுக்கு தெரியவில்லை" என்று கூறியுள்ளார்களாம். இது குறித்து அஞ்சலி தாயார், "என் மகள் ஆடைகள் அணிந்திருந்தாள். ஆனால் அவள் உடலில் ஒட்டு துணி கூட இல்லை. இது என்ன வகையான விபத்து?" என்று கேள்வியெழுப்பி கதறி அழுதுள்ளார்.