டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு: சிவப்பு மண்டலத்தில் நுழைந்தது AQI
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு நிலைமை இன்று (வியாழக்கிழமை) மீண்டும் மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. நகரின் ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு (AQI) 400-ஐத் தாண்டி 'தீவிரமான' (Severe) என்ற சிவப்பு மண்டலத்திற்குள் நுழைந்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, இன்று காலை 8:00 மணி நிலவரப்படி டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI) 399-ஆகப் பதிவானது. காற்றின் வேகம் குறைவு மற்றும் வெப்பநிலை சரிவு காரணமாக அடர்த்தியான புகைமூட்டத்தால் நகரம் சூழப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 19-க்கு பிறகு டெல்லி சந்தித்த மிக மோசமான காற்று மாசு இதுவாகும்.
நீதிமன்ற உத்தரவு
திறந்தவெளி விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை
தொடர்ந்து மோசமான காற்று மாசு காரணமாக, டெல்லி-NCR பகுதிகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் திறந்தவெளி விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திற்கு (CAQM) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்றுத் தரம் 'தீவிரமான' நிலையில் இருப்பது, ஆரோக்கியமானவர்களுக்கும் உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் மற்றும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்களுக்குக் கடுமையான அச்சுறுத்தலை உருவாக்கும். வரும் ஆறு நாட்களுக்கு இதே நிலை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது 'தீவிரமான' பிரிவில் காற்றுத் தரம் இருப்பது, ஆரோக்கியமான நபர்களுக்குக் கூட சுவாசிப்பதில் சிரமத்தையும், நீண்டகால நோயாளிகளுக்குப் பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். எனவே, பொதுமக்கள் முடிந்தவரை வீடுகளுக்குள் இருக்கவும், அத்தியாவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.