LOADING...
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சுவாசிக்க தகுதியற்ற மோசமான நிலைக்கு சென்றது காற்றின் தரம்
டெல்லியில் சுவாசிக்க தகுதியற்ற நிலைக்கு சென்றது காற்றின் தரம்

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சுவாசிக்க தகுதியற்ற மோசமான நிலைக்கு சென்றது காற்றின் தரம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2025
11:05 am

செய்தி முன்னோட்டம்

தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) மீண்டும் கடுமையாகச் சரிந்து, 'மோசம்' மற்றும் 'மிகவும் மோசம்' என்ற பிரிவுகளுக்குள் நுழைந்துள்ளது. குறுகிய கால மேம்பாட்டிற்குப் பிறகு, நகரின் பல பகுதிகளில் அடர்ந்த புகைமூட்டம் (Smog) மீண்டும் சூழ்ந்துள்ளது. இன்று காலை AQI மதிப்பு: டெல்லி (மொத்தம்)- 264 -மோசம்; குருகிராம்- 229- மோசம்; நொய்டா- 216 -| மோசம். நேற்று புதன்கிழமை மாலை AQI 202 ஆகக் குறைந்து காற்றின் தரம் சிறிது மேம்பாடு கண்ட நிலையில், வியாழக்கிழமை காலைக்குள் பெரும்பாலான கண்காணிப்பு நிலையங்களில் AQI மீண்டும் 300-ஐத் தாண்டி 'மிகவும் மோசம்' என்ற வரம்பிற்குச் சென்றது.

புகைமூட்டம்

காற்றின் வேகம் குறைவதால் தரையில் படியும் மாசு

டெல்லியின் முக்கிய பகுதிகளில் அடர்ந்த புகைமூட்டம் காணப்பட்டது. காற்றின் வேகம் குறைவதால் மாசுபடுத்திகள் நிலத்தில் குவிந்து வருகின்றன. இதற்கிடையே நவம்பர் 6 முதல் 8 வரை டெல்லியின் காற்றுத் தரம் தொடர்ந்து 'மிகவும் மோசம்' என்ற பிரிவில் இருக்கும் என்று முன்னெச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. சாலைகளை ஆழமாகச் சுத்தம் செய்தல், தொழில்துறை அலகுகளை ஆய்வு செய்தல் மற்றும் மாசுபடுத்தும் வாகனங்களை தணிக்கை செய்தல் போன்ற மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை டெல்லி அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், முகக்கவசங்களை அணியவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.