Page Loader
நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்திற்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் 

நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்திற்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் 

எழுதியவர் Sindhuja SM
Mar 30, 2024
05:04 pm

செய்தி முன்னோட்டம்

நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா ஆகியோருக்கு எதிராக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ்தா போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். புர்காயஸ்தாவுடன் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் HR தலைவர் அமித் சக்ரவர்த்தியும் சிறப்பு நீதிமன்றத்தால் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

டெல்லி 

8,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை 

சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொள்ள சீன தொடர்புகளிடம் இருந்து பணத்தை பெற்றதாக அவர்கள் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17, 2023 அன்று நியூஸ் கிளிக் மற்றும் அதன் பத்திரிகையாளர்கள் மீது அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்த சில மாதங்களுக்குப் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டனர். டெல்லி காவல்துறையின் முதல் குற்றப்பத்திரிகை பல ஆயிரம் பக்கங்களைக் கொண்டதாகும். சரியாகச் சொன்னால் 8,000 பக்கங்கள் அதில் உள்ளன. நியூஸ் கிளிக் நிறுவனத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட 480 மின்னணு சாதனங்கள் குறித்த தகவல்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கவுர் முன் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை ​​எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நீதிமன்றம் இனி முடிவு செய்யும்.