LOADING...
நண்பனின் 14 வயது மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடூரன் 
இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நண்பனின் 14 வயது மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த கொடூரன் 

எழுதியவர் Sindhuja SM
Aug 22, 2023
04:41 pm

செய்தி முன்னோட்டம்

நண்பனின் 14 வயது மகளை பலமுறை பலாத்காரம் செய்த டெல்லியின் உயர்மட்ட அரசு அதிகாரி, அந்த சிறுமிக்கு ஒவ்வொரு முறையும் மயக்க மருந்து கொடுத்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த இந்த பலாத்கார விவகார செய்தி நாட்டையே அதிர வைத்திருக்கிறது. மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரேமோதய் காக்கா, டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் இணை இயக்குனராக பணி புரிந்து வந்தவர் ஆவர். இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், நேற்று போலீஸார் சிறுமியை பலாத்காரம் செய்த காக்காவையும், குற்றத்தில் அவருக்கு உதவியதற்காக காக்காவின் மனைவியையும் கைது செய்தனர்.

டோஜிபி

சிறுமியின் தந்தை இறந்து சில நாட்களுக்குள் அவளை பலாத்காரம் செய்த கொடூரன் 

இந்நிலையில், விசாரணையின் போது பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2020ஆம் ஆண்டு பாதிப்பட்ட சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இதனையடுத்து, வீட்டில் ஆட்கள் அதிகம் பேர் இருந்ததால் சிறுமியின் தாயார், தற்காலிகமாக அந்த 14 வயது சிறுமியை தனது கணவரின் நண்பரான காக்கா வீட்டில் தங்க வைத்தார். தன் தந்தையின் உயிரிழப்பால் மனஅழுத்தத்தில் இருந்த சிறுமி முதல்முறையாக அக்டோபர் 31, 2020 பலாத்காரம் செய்யப்பட்டார். அதன்பிறகும் பலமுறை இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஒருநாள் காலை அந்த சிறுமி எழுந்த போது, அவளது உடல் எல்லாம் காயங்கள் இருப்பதை உணர்த்துகிறாள். இதற்கிடையில், அந்த சிறுமி கர்ப்பமானதாகவும், அந்த கர்ப்பத்தை கலைக்க காக்காவின் மனைவி வலுக்கட்டாயமாக அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.