பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதி டெல்லி முதல்வர் பதவியேற்பு நடக்கலாம்: யார் முதல்வர்?
செய்தி முன்னோட்டம்
டெல்லியின் புதிய முதல்வரின் பதவியேற்பு விழா பிப்ரவரி 19 அல்லது 20 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
பதவியேற்பிற்கு முன்னதாக புதிய சட்டமன்ற உரும்பினர்களுடன் சட்டமன்றக் கட்சிக் கூட்டம் பிப்ரவரி 17 அல்லது 18 ஆம் தேதிகளில் நடைபெறலாம்.
பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரவு டெல்லிக்கு வந்த பிறகு டெல்லியில் அரசு அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைய வாய்ப்புள்ளது.
இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் பிற பாஜக உயர்மட்டத் தலைவர்கள் இடையே ஒரு சந்திப்பு நடைபெறும்.
பட்டியல்
முதல்வர், சபாநாயகர் பதவிக்கு வேட்பாளர்கள் பட்டியல் தேர்வு
48 எம்.எல்.ஏ.க்களில் 15 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு, அவர்களில் இருந்து ஒன்பது பேர் முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கடந்த சனிக்கிழமை வெளியான தேர்தல் முடிவுகளின்படி, 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் 48 இடங்களைப் பெற்று 27 ஆண்டுகால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பாஜக மீண்டும் டெல்லியில் ஆட்சிக்கு வந்தது.
மறுபுறம் நீண்ட காலமா தலைநகரை ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே வென்றது.
குறிப்பாக கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட அதன் முக்கிய தலைவர்கள் தோல்வியை சந்தித்தனர்.