இந்திய ராணுவத்திற்கு Rs.2.12 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள்: பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்
செய்தி முன்னோட்டம்
இந்திய முப்படைகளின் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறனை அதிகரிக்கும் வகையில், ₹2.12 லட்சம் கோடி மதிப்பிலான மூலதனக் கொள்முதல் முன்மொழிவுகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) ஒப்புதல் அளித்துள்ளது. ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ், இந்த மொத்த கொள்முதலில் சுமார் 82 சதவீதம் இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் படைப்புத் துறையிடமிருந்தே பெறப்படவுள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி மேம்படுவதோடு, பாதுகாப்புப் பொருட்களின் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன ஆயுதங்கள்
தரைப்படைக்கான நவீன ஆயுதங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள்
இந்திய ராணுவத்தின் நடமாட்டத்தை அதிகரிக்கவும், தாக்குதல் திறனை உயர்த்தவும் பின்வரும் நவீன அமைப்புகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
உயர் நடமாட்டம் கொண்ட வாகனங்கள் (HMV) மற்றும் செல்ஃப்-புரோபெல்டு டிரேக்டு துப்பாக்கி அமைப்புகள், துப்பாக்கிச் சூட்டைக் கண்டறியும் 'கன் ஷாட் ரெஸ்பான்ஸ் சிஸ்டம்', லைட் மல்டி ரோல் ஹெலிகாப்டர்கள், ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள், நீண்டதூர காமிகேஸ் ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு ட்ரோன்கள் ஆகியவை சேர்க்கப்படவுள்ளன.
நவீனமயமாக்கல்
கடற்படை மற்றும் விமானப்படையின் நவீனமயமாக்கல்
நவீன ஏவுகணை தாக்குதல்களிலிருந்து போர்க்கப்பல்களைப் பாதுகாக்க 'ஆஃப்போர்டு டீகாய் சிஸ்டம்' மற்றும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட போர்க்கப்பல் தளங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
எல்லைப் பகுதிகளில் துல்லியமான வானிலை மாறுபாடுகளை கண்காணிக்க 'எக்ஸ்-பேண்ட் டாப்ளர் வானிலை ரேடார்' (Mobile X-Band Doppler Weather Radar), புதிய ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் சேர்க்கப்படவுள்ளன.