LOADING...
வங்கக்கடலில் உருவாகிறது 'மாந்தா' புயல்: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
இந்தப் புயலுக்கு 'மாந்தா'(Montha) எனப் பெயரிடப்பட்டுள்ளது

வங்கக்கடலில் உருவாகிறது 'மாந்தா' புயல்: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 24, 2025
01:31 pm

செய்தி முன்னோட்டம்

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) அறிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'மாந்தா'(Montha) எனப் பெயரிடப்பட்டுள்ளது. தாய்லாந்து நாடு பரிந்துரைத்த இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இது நடப்பு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் உருவாகும் இரண்டாவது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆகும். தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தென் கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக். 24) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து மேலும் வலுப்பெறும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

மழை எச்சரிக்கை

தமிழகத்தில் மழை எச்சரிக்கை

வங்க கடலில் உருவாகவுள்ள இந்த புயல் மற்றும் நகர்வு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மற்றும் கனமழை தொடர வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும். நாளை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும், நாளை மறுநாள் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் உருவாகும் நாளன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு விடப்பட்டுள்ளது. பொது மக்கள் மற்றும் அரசுத் துறைகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.