Page Loader
மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது 
மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது

மிக்ஜாம் புயல் எதிரொலி - சென்னை மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது 

எழுதியவர் Nivetha P
Dec 05, 2023
11:45 am

செய்தி முன்னோட்டம்

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம்(டிச.,3) இரவு முதல் கனமழை கொட்டி வருகிறது. பல முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீர் சூழ்ந்துள்ளதால் பல வாகனங்கள் பழுதடைந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் அதிக கனமழை மற்றும் மழை நீர் தேக்கம் காரணமாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையானது குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நாள்தோறும் 2,700 பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் இன்று(டிச.,5) 1000 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று 320 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

அதிமுக 

18 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிப்பு 

மேலும் மழை குறைந்து, நீர் வெளியேறிய பின்னரே வழக்கமான எண்ணிக்கையிலான பேருந்துகள் இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிமுக கட்சி சார்பில் சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர்கள் தொடர்பு கொள்வதற்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையை 18 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த உதவி எண்களை அதிமுக கட்சியின் ஐடி பிரிவு வெளியிட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மொத்தம் 18 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 எண்கள் வீதம் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு மற்றும் விவரங்களை எடப்பாடி கே பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

உதவி எண்கள் குறித்த அறிவிப்பு