NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
    இந்தியா

    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
    எழுதியவர் Nivetha P
    Feb 28, 2023, 08:35 pm 1 நிமிட வாசிப்பு
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே சாலைப்புதூர் தோணுகால் சாலையில் தனியாருக்கு சொந்தமான ஓர் ஏடிஎம் ஒன்று இயங்கி வருகிறது. அதன்படி, அங்கு நேற்று(பிப்.,27) மாலை 4 மணியளவில் எட்டையபுரம் சேர்ந்த படர்ந்தப்புளியை சேர்ந்த சுவிக்கி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஐயப்பன் என்பவர் தனது ஏடிஎம் கார்டு மூலம் ரூ.3500 எடுக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு 3,140 மட்டுமே வந்துள்ளது, அதாவது 500 ரூபாய் நோட்டுக்கள் ஆறு, ஒரே ஒரு 100 ரூபாய் நோட்டு வந்துள்ளது. அடுத்ததாக இரண்டு 200 ரூபாய் நோட்டுகள் வரவேண்டிய நிலையில் 2 ரூ.20 நோட்டுக்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் குழப்பம் அடைந்த அந்த வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளார்.

    ரூ.20 நோட்டுக்கள் வர வாய்ப்பில்லை என்று கூறிய ஏடிஎம் ஊழியர்கள்

    மேலும் குறைவான பணம் வந்ததை புகார் செய்ய நினைத்த நிலையில், ஆனால் அந்த மையத்தில் புகார் எண் எதுவும் வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறியதாக தெரிகிறது. அந்த வாடிக்கையாளர் வங்கியில் அளித்த புகாரின் பேரில், சம்மந்தப்பட்ட தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் குறிப்பிட்ட ஏடிஎம்'ற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் ஏடிஎம் இயந்திரத்தில் 20 ரூபாய் நோட்டுக்கள் வர வாய்ப்பே இல்லை என்று கூறிய அவர்கள், இருப்பினும் சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்படும் என்று அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    மாவட்ட செய்திகள்
    தூத்துக்குடி

    மாவட்ட செய்திகள்

    '10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை  தமிழ்நாடு
    சயனைடு கலந்த மது குடித்து 2 பேர் பலி - டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம்  தமிழ்நாடு
    கரூர்: செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய பெண்! காவல்துறை
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு  தமிழ்நாடு

    தூத்துக்குடி

    தமிழகத்தில் 3 மாவட்டங்களில் ரூ.92.50 கோடி மதிப்பில் 3 மினி டைடல் பூங்கா  தமிழ்நாடு
    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு  அரசு மருத்துவமனை
    தூத்துக்குடி வி.ஏ.ஓ. கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது  காவல்துறை
    ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு  தமிழக அரசு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023