LOADING...
கடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை
கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை - நெகிழ்ச்சியான நிகழ்வு

கடலூர்: கணவனை இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய காவல்துறை

எழுதியவர் Nivetha P
Oct 26, 2023
06:07 pm

செய்தி முன்னோட்டம்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே மணலூர் என்னும் பகுதியில் வசித்தவர் சக்திவேல்(38), இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 3 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். டைல்ஸ் ஒட்டும் கூலி தொழிலாளியான சக்திவேல், கடந்த மார்ச் மாதம் 18ம்.,தேதி வெண்கரும்பூர் என்னும் பகுதியருகே நேர்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து விருதாச்சலம் டிஎஸ்பி ஆ.ஆரோக்யராஜிடம் முத்துலட்சுமி முறையிட்டதாக தெரிகிறது. செங்கல் சூளையில் தான் வேலை செய்வதாகவும், 5 குழந்தைகளுடன் யாருடைய ஆதரவும் இன்றி ஓர் குடிசை வீட்டில் வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து ஆ.ஆரோக்கியராஜ் தனது வாட்ஸ்அப்'ல் 'உதவும் காவல் இதயங்கள்' என்று ஓர் க்ரூப்பை ஆரம்பித்துள்ளார். அதில் இவர் முத்துலட்சுமியின் பரிதாபமான நிலைமை குறித்தும் பதிவு செய்துள்ளார்.

காவல் 

காவல்துறை சார்பில் தாய் வீட்டு சீதனம் கொண்டு வரப்பட்டது 

அதன்படி அந்த பதிவினை கண்டு சக காவல்துறையினர் மட்டுமின்றி பல தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளனர் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் கிடைத்த உதவித்தொகையான ரூ.10 லட்சம் வைத்து சக்திவேலுக்கு சொந்தமான இடத்தில் 600.,சதுரடி பரப்பளவில் ஓர் புதிய வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. பலரும் ஒன்றிணைந்து உதவும் நோக்கில் நிதியுதவி செய்து கட்டப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு 'கருணை இல்லம்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான புதுமனை புகுவிழா கடந்த 24ம் தேதி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இந்த புது வீட்டினை திறந்து வைத்து, முத்துலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளிடம் வீட்டின் சாவியை கொடுத்தார். விழாவின் மிகப்பெரிய முக்கியம்சம் என்னவென்றால், காவல்துறை சார்பில் தாய்வீட்டு சீதனம் மேளதாளத்துடன் கொண்டுவரப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

புதுமனை புகுவிழா