NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது
    டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது
    இந்தியா

    டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது

    எழுதியவர் Nivetha P
    February 10, 2023 | 04:33 pm 0 நிமிட வாசிப்பு
    டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது
    டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது

    ஜார்கண்டில் உள்ள ராஞ்சியை சேர்ந்த 17வயதுடைய சிறுமி, ஓர் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் டெல்லி, குர்கானில் உள்ள ஒரு தம்பதியர் வீட்டில் குழந்தையை பார்த்துகொள்வதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளார். ஆனால் அந்த தம்பதியர் கடுமையாக வேலை வாங்கியதோடு, தினமும் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்கள். இதுகுறித்து சாகி மையத்தின் பொறுப்பாளரான பிங்கி மாலிக் அளித்த புகாரின்படி, அச்சிறுமியை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளார்கள். அந்த 17வயது சிறுமியின் கைகள், கால்கள் மற்றும் வாய் என பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் காவல்துறை கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து கொடுமைப்படுத்திய தம்பதி மனிஷ் கட்டார்(36), கமல்ஜீத் கவுர்(34) ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளார்கள். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கூறுகையில், 5மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய மாமா தன்னை கட்டாரின் வீட்டில் தன்னை வேலைக்காக விட்டுசென்றதாக கூறியுள்ளார்.

    பணிப்பெண்ணை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்திய தம்பதி

    மேலும், அந்த வீட்டில் அவரது மனைவி மற்றும் மகள் உள்ளனர். தினமும் தன்னை அடித்து கொடுமைபடுத்தி, இரும்பு கம்பியால் சூடு போடுவதோடு, உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார். தொடர்ந்து கட்டார் தன்னை நிர்வாணப்படுத்தி நிற்க வைத்து தனது அந்தரங்க பகுதிகளில் அடிமை கொடுமைப்படுத்துவார் என்றும் கூறினார். இத்தம்பதியர் தன்னை அடைத்து கொடுமைப்படுத்தியதோடு தனது குடும்பத்தாருடன் பேசவும் அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இவர் அளித்துள்ள புகாரின்பேரில் அந்த தம்பதியர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதோடு, போக்ஸோ சட்டமும் பாய்ந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் செய்த குற்றம் வெளியில் தெரியவந்த நிலையில், கமல்ஜீத் பணிபுரியும் மக்கள் தொடர்பு நிறுவனம் மற்றும் கட்டார் பணிபுரிந்த இன்சூரன்ஸ் நிறுவனம் இவர்களை பணியில் இருந்து நீக்கியதாக இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    டெல்லி
    இந்தியா

    டெல்லி

    தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி மதுரை
    வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர் இந்தியா
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது ஜம்மு காஷ்மீர்
    டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில் தொல். திருமாவளவன்

    இந்தியா

    தமிழகத்திலுள்ள ஜெயின் சுற்றுலாத்தலங்களுக்கு 5 நாள் பயணம் - தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தமிழ்நாடு
    பிபிசியை தடை செய்ய கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    தென் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு 14-16 சிறுத்தைகள் இடமாற்றம்-மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆப்பிரிக்கா
    2 புதிய நீதிபதிகள்: முழு பலத்துடன் இனி இயங்க இருக்கும் உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023