LOADING...
சென்னையை புரட்டிப்போட்ட கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
சென்னையில் கடந்த முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது

சென்னையை புரட்டிப்போட்ட கனமழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

எழுதியவர் Venkatalakshmi V
Dec 02, 2025
08:29 am

செய்தி முன்னோட்டம்

'டிட்வா' புயலின் தாக்கத்தால், சென்னையில் கடந்த முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் பெய்துவரும் இந்த மழையால், நகரின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் காரணமாக, சென்னை மாநகரின் பிரதான சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், நுங்கம்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு

நகரில் தேங்கிய மழை நீர் 

மழைநீர் வீடுகள், வணிக வளாகங்கள், கோவில்கள் எனப் பல குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் சாலைகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய வானிலை நிலவரப்படி, சென்னையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, இன்னும் சில மணி நேரங்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement