Page Loader
கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார்
கொன்ராட் கே சங்மா மேகாலயா முதல்வராக பதவியேற்றார்.

கொன்ராட் சங்மா மீண்டும் மேகாலயா முதலமைச்சராக பதவியேற்றார்

எழுதியவர் Sindhuja SM
Mar 07, 2023
02:19 pm

செய்தி முன்னோட்டம்

தேசிய மக்கள் கட்சியின்(NPP) தலைவரான கொன்ராட் கே சங்மா, தொடர்ந்து இரண்டாவது முறையாக மேகாலயா முதல்வராக இன்று(மார் 7) பதவியேற்றார். இன்று பிற்பகுதி நாகாலாந்து முதல்வராக தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின்(என்டிபிபி) நெய்பியு ரியோ பதவியேற்கிறார். NPPயைச் சேர்ந்த பிரஸ்டோன் டின்சாங் மற்றும் ஸ்னியாவ்பலாங் தார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர் பாஜகவின் அலெக்சாண்டர் லாலு ஹெக், UDPயின் பால் லிங்டோ மற்றும் கிர்மென் ஷைல்லா மற்றும் HSPDPயின் ஷக்லியார் வார்ஜ்ரி ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்தியா

பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர்

தேசிய மக்கள் கட்சியின(NPP) ஏழு எம்.எல்.ஏக்களை தவிர, UDPயைச் சேர்ந்த இருவருக்கும், BJP மற்றும் HSPDPயிலிருந்து தலா ஒருவருக்கும் சங்மாவின் அமைச்சரவையில் உறுப்பினர்களாக இடம் கிடைத்துள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். மார்குயிஸ் என் மரக், ரக்கம் ஏ சங்மா, அம்பரீன் லிங்டோ, கமிங்கோன் யம்போன் மற்றும் ஏ டி மோண்டல் ஆகியோர் NPPயில் இருந்து கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். NPP தலைமையிலான கூட்டணியில் NPPயை சேர்ந்த 26 பேர், பாஜகவை சேர்ந்த இருவர் உட்பட 45 எம்எல்ஏக்கள் உள்ளனர்.