கர்நாடக தேர்தல் 2023: வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்டது, முன்னிலையில் இருப்பது யார்?
கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதி முடிந்துவிட்ட நிலையில், காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் பெங்களூரு இல்லத்திற்கு வெளியே இனிப்புகள் விநியோகிக்க தொடங்கியுள்ளனர். தேர்தலுக்கு முன் நடந்த பஜ்ரங் தளம் தொடர்பான சர்ச்சையை அடுத்து, காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, "பிரதமர் மோடிக்கு அனுமனின் பக்தர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்" என்று கூறியுள்ளார். விஷ்வ ஹிந்து பிரிஷத்தின்(VHP) பஜ்ரங் தளம் போன்ற அமைப்புகளை தடை செய்வோம் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவின் சித்தாந்த பெற்றோரான RSSக்கு மிக நெருக்கமான ஒரு அமைப்பாக VHP அறியப்படுகிறது.