வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு செல்கிறார் ராகுல் காந்தி
சென்ற வாரம் மணிப்பூர் வன்முறை தொடர்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்த நிலையில், இன்று ராகுல் காந்தி மணிப்பூர் செல்கிறார். கடந்த 2 மாதங்களாக வன்முறையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது மணிப்பூர் நகரம். அதற்கு காரணம், மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த இரு சமூகத்தினருக்கும் இருந்த கருத்து மோதல், கடந்த 2 மாதங்களாக கலவரமாக மாறியுள்ளது. கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து மத்திய அரசோ, பிரதமரோ தலையிடவில்லை என்ற பேச்சும் நிலவி வரும் இந்த நேரத்தில்தான், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூருக்கு பிரயாணப்படுகிறார்.