டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
ராஜஸ்தான், கரன்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனர்(75) கடந்த 12ம் தேதி டெல்லி எய்ம்ஸ் முதியோர் மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இன்று(நவ.,15) உயிரிழந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது மறைவிற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
வரும் நவம்பர் 25ம் தேதி 200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டபைக்கு தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக.,-காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இவரது மரணம் நிகழ்ந்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
காங்கிரஸ் வேட்பாளர்
Rajasthan: Congress candidate Gurmeet Singh Kooner passes away #Gurmeetsingh #Congress #Rajasthan pic.twitter.com/bJdqak2FVV
— ASD News (@MediaAsd) November 15, 2023