வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹101.50 உயர்வு
செய்தி முன்னோட்டம்
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஒரே நாளில் ₹101.50 உயர்ந்து ₹2,000தை தொட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து, தமிழ்நாட்டில் வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்களுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போரால் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை, ₹101.50 உயர்ந்து, ₹1999.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி, ₹918.50 ஆக தொடர்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
₹2,000த்தை தொட்டது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை
#JustIN | வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ஏற்றம்!#SunNews | #CommercialGasCylinder | #LPGPriceHike pic.twitter.com/Y44OUmOPv2
— Sun News (@sunnewstamil) November 1, 2023