LOADING...
கோவை மேடையில் பாண்டியனின் உரையை கேட்டு "சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே" என வருந்திய பிரதமர்
தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

கோவை மேடையில் பாண்டியனின் உரையை கேட்டு "சிறுவயதில் தமிழ் கற்றிருக்கலாமே" என வருந்திய பிரதமர்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 19, 2025
05:00 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசின் முக்கியத் திட்டமான பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி(PM-KISAN) திட்டத்தின் 21வது தவணைத் தொகையை இன்று பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார். பிரதமர் மோடி, இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் உள்ள 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம், மொத்தம் ரூ.18,000 கோடி நிதியை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் விடுவித்தார். இந்தத் திட்டம் துவங்கியது முதல் இதுவரை நாட்டின் விவசாயிகளுக்கு மொத்தமாக ரூ.4 லட்சம் கோடி நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.

கோவை

கோவையில் பிரதமர் மோடியின் உரை

கோவை கொடிசியா வளாகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இன்று பிற்பகல் கோவைக்கு வந்த பிரதமருக்கு, நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரை பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாநாட்டைத் தொடங்கி வைத்ததோடு, சிறந்த விவசாயிகள் 18 பேருக்குப் பிரதமர் விருதுகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், "பாண்டியன் உரை சிறப்பாக இருந்தது. உரை தமிழில் இருந்ததால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழைச் சிறு வயதில் கற்று இருக்கலாமே என்று அடிக்கடி நினைத்ததுண்டு," எனத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். மேலும், பாண்டியனின் உரையை ஆங்கிலம் அல்லது இந்தியில் மொழியாக்கம் செய்யுமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post