Page Loader
ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது 

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த 6 தமிழ் மீனவர்கள் கேரள கடலோரப் பகுதியில் கைது 

எழுதியவர் Sindhuja SM
May 06, 2024
07:01 pm

செய்தி முன்னோட்டம்

ஆறு இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற ஈரானிய மீன்பிடிக் கப்பலை கேரளக் கடற்கரையில் தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்ததாக இந்திய கடலோரக் காவல்படை இன்று தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த மீனவர்களான ஆறு பேரும் ஈரானிய ஸ்பான்சரான சையத் சவுத் அன்சாரி என்பவருக்கு கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவர். ஆரம்ப விசாரணையின்படி, அந்த ஈரானிய ஸ்பான்சர் தமிழ் மீனவர்களை மோசமாக நடத்தியதாகவும், அவர்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சையத் சவுத் அன்சாரி, தங்கள் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்து வைத்துக்கொண்டதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தியா 

ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்த கதை 

இதையடுத்து, அவரிடம் இருந்து தப்பிக்க, அதே படகை பயன்படுத்தி ஈரானில் இருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல அந்த படகு குழுவினர் முடிவு செய்தனர். இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த அந்த கப்பலை இந்திய கடலோரக் காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விரைந்து சென்று தடுத்து நிறுத்தின. அதன் பின், கடலோர காவல்படை போர்டிங் குழு அந்த கப்பலில் ஏறியது. அதில் இருந்த ஆறு மீன்பிடி பணியாளர்களும் இந்தியர்கள் என்பது அதனையடுத்து தெரியவந்தது. அந்த படகு தேச விரோதச் செயலில் ஈடுபட்டதா என்பதை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதன் பிறகு, மேலும் விசாரணை நடத்த அந்த கப்பல் கேரளாவில் உள்ள கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. விசாரணைக்கு பின், தமிழ் மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.