நிலக்கரி சுரங்கத்திட்ட பட்டியல் - தமிழக டெல்டா பகுதிகளை நீக்கிய மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம்29ம்தேதி இந்தியா முழுவதும் உள்ள 101வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பினை வெளியிட்டது.
இந்த அறிவிப்பில் தமிழகத்தில் 3பகுதிகள் தேர்வாகியிருந்தது.
ஆனால் அந்த 3பகுதிகளும் டெல்டா பகுதிகளாக அறிவிக்கப்பட்ட அரியலூர் மாவட்ட உடையார்பாளையம் வட்டம் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி மற்றும் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய 3 பகுதிகள் இடம்பெற்றிருந்தது.
ஆனால் இந்த பகுதிகளும் தமிழகத்தின் டெல்டாமாவட்ட பகுதிகளான, பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கப்பட்டவை ஆகும்.
இதனால் தமிழகத்தில் இந்த நிலக்கரி சுரங்கப்பணிகளுக்கு பெரும்எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பட்டியலில் இருந்து டெல்டா மாவட்ட பகுதிகளை நீக்கக்கோரி கோரிக்கை கடிதம் ஒன்றினையும் எழுதியிருந்தார்.
3 சுரங்கங்கள் நீக்கம்
பிரதமருக்கும் மத்திய அமைச்சருக்கும் நன்றி தெரிவித்த அண்ணாமலை
இந்நிலையில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தினை ரத்து செய்து மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அதில் அவர், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்னை பெங்களூரில் அவசரஅவசரமாக சந்தித்து இத்திட்டத்தினை ரத்து செய்யுமாறு கோரினார்.
கூட்டாட்சி தத்துவத்தின் மாண்பை காக்கவும், மக்கள் நலனை கருத்தில்கொண்டும் நிலக்கரி சுரங்க ஏலத்திலிருந்து குறிப்பிட்ட அந்த 3சுரங்கங்களை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதில் அவர் தமிழக முதல்வரையும் டேக் செய்துள்ளார்.
இதற்கு அண்ணாமலை தற்போது தனது நன்றிகளை மத்தியமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.