
சென்னையில் நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு
செய்தி முன்னோட்டம்
சென்னையில் உள்ள 10 ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 'ஏரிக்கரை மேம்பாடு' என்னும் பெயரில் 100 கோடி ரூபாய் செலவில் ஏரிகளை மேம்படுத்த சிஎம்டிஏ முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அதன்படி, பெரும்பாக்கம் ஏரி, ரெட்டேரி, முடிச்சூர் ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, கொளத்தூர் ஏரி, புழல் ஏரி, அயனம்பாக்கம் ஏரி உள்ளிட்டவைகள் சீரமைக்கப்படவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஏரிகளை புனரமைக்கப்பட்டு ஏரியை சுற்றி சைக்கிள்பாதை, தோட்டம், விளையாட்டுத்திடல், திறந்தவெளி தியேட்டர், திறந்த வெளி அரங்கம், மீன்பிடிக்கும் இடம், படகு சவாரி, நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட பலவற்றை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
நீர் விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகளுடன் 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு
நீர் விளையாட்டுகள், படகு சவாரி வசதிகளுடன் ரெட்டேரி, புழல் உள்ளிட்ட 10 ஏரிகளை சீரமைக்க சிஎம்டிஏ முடிவு#Chennai | #ChennaiCorporation | #WaterSports | #CMDA | https://t.co/MKRreG2ZRJ
— Tamil The Hindu (@TamilTheHindu) March 18, 2023