சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தினை மாற்ற சி.எம்.டி.ஏ. திட்டம்
செய்தி முன்னோட்டம்
சென்னை கோயம்பேடு பகுதியில் அரசு பேருந்துகளுக்கு என ஒரு தனி பேருந்து நிலையமும், தனியார் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்துநிலையமும் 37 கிலோ மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.
ஒரே இடத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்கி வருவதால் அதிகப்படியான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இதனால் தனியார் பேருந்துநிலையத்தினை சென்னை வெளிவட்ட சாலைக்கு மாற்ற சி.எம்.டி.ஏ. முடிவுசெய்துள்ளது என்று கூறப்படுகிறது.
அதன்படி, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 7 கிமீ., தூரத்தில் உள்ள வரதராஜபுரத்தில் தனியார் பேருந்து நிலையத்தினை அமைப்பதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்படுவதாக அமைச்சர் சேகர் பாபு அவர்கள் அண்மையில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பானது விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | சென்னை கோயம்பேடு தனியார் பேருந்து முனையத்தை இடம் மாற்ற சி.எம்.டி.ஏ. திட்டம்!#SunNews | #Koyambedu | #PrivateBusTerminus pic.twitter.com/9rh2SmtuYC
— Sun News (@sunnewstamil) May 15, 2023