Loading...
2029 தேர்தல் இலக்கல்ல உங்கள் எதிர்காலமே முக்கியம்: முதலமைச்சர் விஜய் பேச்சு
2029 தேர்தல் இலக்கல்ல உங்கள் எதிர்காலமே முக்கியம் என முதலமைச்சர் விஜய் பேச்சு

2029 தேர்தல் இலக்கல்ல உங்கள் எதிர்காலமே முக்கியம்: முதலமைச்சர் விஜய் பேச்சு

எழுதியவர் Vasuki
Nov 04, 2026
07:22 pm

செய்தி முன்னோட்டம்

"2029 தேர்தல் எனக்கு இலக்கல்ல; உங்களுடைய எதிர்காலமே எனக்கு மிக முக்கியம்" எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள் மத்தியில் முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், விருதுகள் மற்றும் கல்வி ஊக்கத்தொகைகளை முதலமைச்சர் விஜய் நேரில் வழங்கிக் கவுரவித்தார். இந்நிகழ்வில் மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

அண்ணன்

அரசியல் பேச வரவில்லை அண்ணனாக வந்தேன்

மேடையில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், "இங்கு நான் முதலமைச்சராக வரவில்லை, உங்கள் வீட்டு அண்ணனாகவே வந்துள்ளேன்."

"2029 தேர்தலுக்காக நான் இப்போதே பேச வந்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம்; ஆனால் மாணவர்களாகிய உங்களுக்கு இப்போதைக்கு அரசியல் தேவையில்லை."

"உங்கள் தனித்தன்மையை யாராவது தடுக்க முயன்றால், நீங்கள் வெற்றியை நோக்கிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்."

"உங்களுக்குப் பிடித்தமான ஒரு வாழ்க்கை அமைந்த பிறகு தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்தியுங்கள்" என்று உற்சாகமூட்டினார்.

வழிகாட்டுதல்

மாணவர்களுக்கான நல்வழிகாட்டல் மற்றும் இலக்கு

தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் ஒருபோதும் லஞ்சம் வாங்கக் கூடாது என்றும், போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

"உங்களுடன் நான் இருக்கிறேன், என்னுடன் நீங்கள் இருக்கிறீர்கள்; வேறென்ன வேண்டும்? கடினமாக உழைத்து நீங்கள் வெற்றி பெற்றால் மற்றவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் முன்னேறுங்கள்" எனக் கூறி மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டினார்.

முதலமைச்சரின் இந்த உருக்கமான பேச்சு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ADVERTISEMENT