'பால் உற்பத்தியாளர்களின் உழைப்பிற்கு மரியாதை': ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்திய முதல்வர் விஜய்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ₹41 ஆக உயர்த்தி முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பால் உற்பத்தியாளர்களின் நலன் மற்றும் தற்போதைய சூழல் சட்டப்பேரவை சபை நடவடிக்கைகள் தொடங்கியதும் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், பால் உற்பத்தியாளர்களின் சுமையைக் குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 4.3% கொழுப்புச் சத்து மற்றும் 8.2% இதர சத்து அடங்கிய ஒரு லிட்டர் பாலுக்குக் கொள்முதல் விலையாக ₹35 மற்றும் மாநில ஊக்கத்தொகையாக ₹3 என மொத்தம் ₹38 வழங்கப்பட்டு வந்த நிலையை அவர் சுட்டிக்காட்டினார்.
விலை உயர்வு
கொள்முதல் விலை உயர்வு விவரங்கள்
கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் லிட்டருக்கு ₹1-ம், அரசு வழங்கும் ஊக்கத்தொகை ₹3-லிருந்து உயர்த்தப்பட்டும், மொத்தமாகக் கொள்முதல் விலை ₹38-லிருந்து ₹41 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ₹3 கூடுதல் வருவாய் கிடைக்கும்.
கடந்த காலத்தில் பால் உற்பத்தியாளர்களின் அதிகரித்துவரும் செலவினங்களைக் முந்தைய அரசு கருத்தில் கொள்ளவில்லை என்று கூறிய முதல்வர், கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த உயர்வு வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இந்த விலை உயர்வால் அரசுக்கு மாதத்திற்கு சுமார் ₹30 கோடியும், ஆண்டிற்குச் சுமார் ₹360 கோடியும் கூடுதல் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Chief Minister Joseph Vijay announced that the milk procurement price will be increased from ₹38 to ₹41. pic.twitter.com/OYDVxkTVQt
— Vignesh Theni (@Vignesh_twitz) August 19, 2026