Loading...
OpenAI நிறுவனத்தின் 'ChatGPT ஃபார் டீன்ஸ்' அறிமுகம்: சிறார்களுக்கான புதிய பாதுகாப்பு அம்சங்கள்
OpenAI நிறுவனத்தின் 'ChatGPT ஃபார் டீன்ஸ்' அறிமுகம்

OpenAI நிறுவனத்தின் 'ChatGPT ஃபார் டீன்ஸ்' அறிமுகம்: சிறார்களுக்கான புதிய பாதுகாப்பு அம்சங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2026
10:14 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான OpenAI, 13 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்காக 'சாட்ஜிபிடி ஃபார் டீன்ஸ்' என்ற புதிய பதிப்பை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கல்வி கற்பதற்கும், புதிய விஷயங்களை ஆராய்வதற்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தில், டீன் ஏஜ் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் கட்டுப்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள்

வயதுக்கேற்ற பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள்

சிறார்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப இதில் கடுமையான உள்ளடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சுயம்பாதிப்பு, தவறான பழக்கவழக்கங்கள், வன்முறை மற்றும் ஆபாசமான விஷயங்கள் குறித்த கேள்விகளுக்கு இது பதிலளிக்காது.

மேலும், இந்த AI மாடல் மனிதர்களை போல உணர்ச்சிகளை வெளிப்படுத்தவோ அல்லது காதல் மொழிகளைப் பயன்படுத்தவோ இயலாதவாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கணக்குகளைக் கண்காணிக்கும் 'பேரண்டல் கன்ட்ரோல்' வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்டடி மோட்

கற்றலை ஊக்குவிக்கும் 'ஸ்டடி மோட்'

மாணவர்கள் வீட்டுப்பாடங்களுக்கான பதில்களை நேரடியாக நகலெடுப்பதைத் தவிர்க்க 'ஸ்டடி மோட்' என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.

இது மாணவர்களுக்கு சுலபமாக பதிலை தராமல், வினாக்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம் அவர்களைச் சிந்திக்க வைத்துப் பதிலைக் கண்டறிய உதவுகிறது.

மேலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தொடர்ந்து பயன்படுத்தினால் இடைவேளை எடுக்குமாறு எச்சரிக்கும் அமைப்பும் இதில் உள்ளது.

பயனர்கள் அக்கௌன்ட் தொடங்கும் போது தெரிவிக்கும் வயது அல்லது AI அமைப்பின் வயது கணிப்பின் அடிப்படையில், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்தத் தளம் தானாகவே கணக்கில் செயல்படுத்தப்படும்.

பள்ளி மாணவர்கள் மத்தியில் AI பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், ஓபன்ஏஐ நிறுவனத்தின் இந்த முயற்சி பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்கும் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT