Loading...
MLA-க்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்

MLA-க்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர்: பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2026
10:19 am

செய்தி முன்னோட்டம்

சட்டமன்றத் தொகுதி சார்ந்த களப்பணிகளை சீராகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்கு ஏதுவாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் (MLA) அரசு சார்பில் வாகனம் மற்றும் உதவியாளர் வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதிகளுக்குள் தடையின்றி பயணிக்க அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்றார். அந்த வாகனத்திற்கான ஓட்டுநர் ஊதியம், எரிபொருள் செலவு மற்றும் பராமரிப்புச் செலவினங்களுக்காக மாதந்தோறும் ₹75,000 வாகனப் படியாக வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

உதவியாளர்

அலுவலக உதவியாளர் படி

எம்.எல்.ஏ-க்களின் தினசரி அலுவலக நிர்வாகப் பணிகளுக்கும், தொகுதி மக்களின் கோரிக்கைகளைக் கையாள்வதற்கும் உதவியாளர் ஒருவரை நியமித்துக் கொள்ளலாம்.

இதற்காக அரசு சார்பில் மாதந்தோறும் ₹25,000 உதவியாளர் படியாக வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விசிக காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எல்.இ. ஜோதிமணி, தொலைதூரப் பகுதிகளில் இருந்து வரும் வசதி குறைந்த எம்.எல்.ஏ-க்களுக்குக் களப்பணி ஆற்ற வாகனம் மற்றும் உதவியாளர் தேவை எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

மக்கள் பிரதிநிதிகளின் இந்தக் கோரிக்கையைக் கனிவோடு பரிசீலித்து, அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கும் பயன்படும் வகையில் இத்திட்டத்தை முதலமைச்சர் விஜய் செயல்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT