Loading...
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி: செப்டம்பர் 1 முதல் பல ரயில்களின் சேவை மாற்றம்
செப்டம்பர் 1 முதல் பல ரயில்களின் சேவை மாற்றம்

சென்னை எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி: செப்டம்பர் 1 முதல் பல ரயில்களின் சேவை மாற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2026
11:34 am

செய்தி முன்னோட்டம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பல முக்கிய விரைவு ரயில்களின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் வரை இயக்கப்பட்ட பல முக்கிய ரயில்கள் பயணிகள் வசதிக்காகத் தாம்பரம், மாம்பலம் மற்றும் சென்னை கடற்கரை ரயில் நிலையங்களோடு தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தின் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால், இந்தத் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களின் ரயில் புறப்படும் மற்றும் அடையும் நிலையங்களை முன்பதிவு விவரங்கள் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாற்றப்பட்ட ஸ்டேஷன்கள்

எழும்பூருக்கு பதிலாக மாற்றப்பட்ட ஸ்டேஷன்கள்

மன்னார்குடி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்: செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 13 வரை தாம்பரம் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.

திருச்சி - சென்னை எழும்பூர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்: செப்டம்பர் 9 முதல் 15 வரையிலும், செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 14 வரையிலும் மாம்பலத்தோடு நிறுத்தப்படும்.

சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்: செப்டம்பர் 12 முதல் 15 வரை மாம்பலத்தோடு நிறுத்தப்படும். மறுமார்க்கமாகச் சேலம் சூப்பர்பாஸ்ட் ரயில் எழும்பூருக்குப் பதில் சென்னை கடற்கரையிலிருந்து புறப்படும்.

மும்பை சிஎஸ்டி - எழும்பூர் எக்ஸ்பிரஸ்: செப்டம்பர் 12 முதல் 15 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

ADVERTISEMENT