தஞ்சாவூர், சேலத்தில், ரூ.60 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்காக்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
தொழில்துறை சார்பில், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை, இன்று (செப்.23) முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகளில் புதிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவர் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று காலை முதல்வர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் ரூ.4.66 கோடியில் நிறுவப்பட்ட கலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக்கூடம் மற்றும் ரூ.17.04 கோடியில் கட்டப்பட்ட 4 சேமிப்புக் கிடங்குகளை திறந்து வைத்தார்.
Twitter Post
#திராவிட_நாயகன் மாண்புமிகு #தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையிலான #திராவிட_மாடல அரசின் பரவலாகப்பட்ட வளர்ச்சி என்ற நோக்கத்திற்கு இன்று மற்றுமொரு பொன் நாள் ! குறிப்பாக #தஞ்சாவூர் மற்றும் #சேலம் மக்களுக்கு அற்புதமான நாள் ! 🚀 தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் #மினி_டைடல்... https://t.co/A0UKTU3vvN pic.twitter.com/SCQ63ZzxJS— Dr. T R B Rajaa (@TRBRajaa) September 23, 2024
58 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
இவற்றோடு, ரூ.36.25 கோடி செலவில் கட்டப்பட்ட 58 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் ரூ.15.22 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார் முதல்வர். மேலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் 110 பேருக்கு பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன. அதன்பிறகு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில், உதவி வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.