அனைத்து தொகுதிகளிலும், இளைஞர்களுக்கு அனைத்து வசதிகளுடன் பணியிட மையம்: முதல்வர் அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.2.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட முதல்வர் படைப்பகத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் படிப்பு, பணியாற்றும் மற்றும் உணவுத்தளம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
முதல்வர் படைப்பகத்தில் ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கலாம். மேலும், படிப்பிற்குத் தேவையான புத்தகங்களை கொண்ட நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பணி புரிவதற்கு வசதியாக ஒரு கோ ஒர்கிங் ஸ்டேஷன் என்ற பணியாற்றும் இடமும் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கை
பிற தொகுதிகளிலும் உருவாக்கிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், அனைத்து வசதிகளுடன் பணியிட மையங்களைச் சென்னையின் பிற தொகுதிகளிலும் உருவாக்கிட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
"பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், Work From Home போல் அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களது வேலைக்கு ஏற்றாற்போல், WiFi உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பகிர்ந்த பணியிட மையம் மற்றும் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள் கவனச் சிதறல்களின்றிப் பயில ஏதுவாகப் படிப்பகம் ஆகியவற்றைக் கொளத்தூர் தொகுதியில் உருவாக்கியுள்ளோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
“முதல்வர் படைப்பகம்”
— M.K.Stalin (@mkstalin) November 4, 2024
👩💻 Co-Working Space
பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும், Work From Home போல் அலுவலகங்களுக்கு வெளியே இருந்து பணிபுரியும் இளைஞர்களது வேலைக்கு ஏற்றாற்போல், WiFi உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய பகிர்ந்த பணியிட மையம்
📚 Learning Centre
அனைத்து வகையான போட்டித்… pic.twitter.com/KNNGXd5o4e