Page Loader
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?
திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை பாலம்

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர்; அதன் சிறப்பம்சங்கள் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Dec 30, 2024
06:22 pm

செய்தி முன்னோட்டம்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபம் இடையே கண்ணாடி இழைப்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு இந்த கண்ணாடிபாலத்தை அவர் திறந்து வைத்தார். உடன், துணை முதல்வர் உதயநிதி பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். அதோடு கலைஞர் கருணாநிதி நிறுவிய திருவள்ளுவர் சிலை, இனி 'பேரறிவுச் சிலை' (Statue of Wisdom) எனப் பெயர் சூட்டப்பட்டு, அதற்கான கல்வெட்டையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக கன்னியாகுமரியில் கடலின் நடுவே இந்த கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சிறப்பம்சங்கள்

கண்ணாடி இழை பாலத்தின் சிறப்பம்சங்கள்

கண்ணாடி இழை பாலத்தின் நீளம் 77 மீட்டர், அகலம் 10 மீட்டர் ஆகும். விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு நடந்தே இந்த பாலத்தில் வழியாக சுற்றுலா பயணிகள் செல்லலாம். திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவு ஆவதை ஒட்டி, இந்த கண்ணாடி இழை பாலம் நிறுவப்பட்டுள்ளது. 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த பாலம் உருவாக்கப்பட்டு உள்ளது. பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. கடல் நடுவில் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தூண்கள் தலா 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடலில் அமைக்கப்பட்டுள்ள தூண்கள் கடல் உப்புக் காற்றால் பாதிக்காத வகையில் ரசாயன கலவை கலந்த சிமென்ட் காங்கிரீட் அமைக்கப் பட்டுள்ளது.