தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக தலைமை செயலகத்தில் கூடிய அனைத்துக்கட்சி கூட்டம்: விவரங்கள் இதோ
செய்தி முன்னோட்டம்
தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் 56 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பைத் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், தொகுதி மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் பலம் குறைவாகும் என்றும், இது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய உரிமைப் போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்.
அதோடு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக பிரதமர் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | “நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையை மேலும் 30 ஆண்டுகள் ஒத்திவைக்க வேண்டும். இதுகுறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்”
— Sun News (@sunnewstamil) March 5, 2025
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்#SunNews | #CMMKStalin | #Delimitation | @mkstalin pic.twitter.com/xW1eg7EPj7
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக தமிழக அரசு கூடிய அனைத்துக்கட்சி கூட்டம்
முன்னதாக மத்திய அரசு 2026ஆம் ஆண்டில் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு நடைபெறும் என்றும் தெரிவித்தது.
இதனை எதிர்த்த தமிழக அரசு, மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு தொகுதி சீரமைப்பு செய்தால், எம்.பி. தொகுதிகள் குறையக்கூடும், மறுசீரமைப்பின் மூலம் தமிழ்நாடு 8 மக்களவை இடங்களை இழக்கும் அபாயம் உள்ளது எனக்கூறியது.
இதற்காக இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூடியுள்ளது.
எனினும் தமிழகத்தில் எந்த தொகுதியும் நீக்கப்பட்டது என அமித்ஷா கடந்த வாரம் உறுதிபட தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய கூட்டத்தின் இறுதியில் மறுசீரமைப்பு முடிவை ஒத்தி வைக்கவும், இது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.