
திருவண்ணாமலை மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக பாறை உருண்டு வீடு மீது விழுந்து உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
புயல் காரணமாக திருவண்ணாமலையில் இரண்டு தினங்களாக கடும் மழை பெய்தது.
இதில் மலையிலிருந்து மண் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததில், வீடு இடிந்ததுடன் 7 பேர் மண்ணுக்கடியில் சிக்கிக்கொண்டனர்.
இவர்களை உயிருடன் மீட்க பேரிடர் மீட்பு குழுவும் தீயணைப்பு துறையினரும் இரண்டு நாட்களாக போராடிய நிலையில், நேற்று இவர்களின் சடலம் மீட்கப்பட்டது.
இந்த மீட்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மண்ணில் புதையுண்டவர்களை உயிருடன் மீட்க போராடியதாகவும், ஆனால் முடியவில்லை என வருத்ததுடன் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | "எப்படியாவது நல்ல செய்தி வரும்னுதான் எதிர்பார்த்தோம்"
— Sun News (@sunnewstamil) December 3, 2024
- மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியை பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி #SunNews | #Tiruvannamalai | #CycloneFengal | @Udhaystalin pic.twitter.com/i47y9VVdUV
அறிக்கை
நிவாரணம் வழங்குவது குறித்து அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திருவண்ணாமலை மாவட்டத்தில் வசித்த ராஜ்குமார் என்பவரின் வீட்டின் மீது கனமழை காரணமாக மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வீடு மீது விழுந்தது. இதனால் அவரது வீடு மண் மற்றும் பாறைகளால் மூடப்பட்டு இடிந்து போனது. இதை அறிந்த மாவட்ட நிர்வாகம், தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவலளித்து, 39 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்".
மீட்பு முயற்சிகள் பலனளிக்காமல் ஏழு நபர்கள் உயிரிழந்தது குறித்து,"இந்த துயரமான செய்தி எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது. இந்த உயிரிழப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்." என தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | தி.மலை மண்சரிவு- ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்வர்#MKStalin | #Tiruvannamalai | #Landslide | #TiruvannamalaiLandslide | #RainUpdatewithPT pic.twitter.com/tKGfSY6QG7
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) December 3, 2024