Loading...
மத்திய அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றதால் போராட்டத்தை திரும்பப் பெற்றது CJP
மத்திய அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றதால் போராட்டத்தை திரும்பப் பெற்றது CJP

மத்திய அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றதால் போராட்டத்தை திரும்பப் பெற்றது CJP

எழுதியவர் Sekar Chinnappan
Jul 25, 2026
07:00 pm

செய்தி முன்னோட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்று வந்த நாடு தழுவிய போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மத்திய அரசு தங்களது முதன்மை கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும், அமைதியான வழியில் கலைந்து செல்லுமாறு போராட்டக்காரர்களை சிஜேபி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கூடுதல் விபரங்கள் இங்கே:-

மத்திய அரசு உறுதி

கல்வி அமைச்சர் ராஜினாமா மற்றும் எழுத்துப்பூர்வ உறுதி

முன்னதாக, மாணவர்களின் தொடர் போராட்டங்கள் மற்றும் அரசியல் அழுத்தத்தின் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதன் தொடர்ச்சியாக, சிஜேபி முன்வைத்த முக்கியக் கோரிக்கைகளான அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் ஆகியவற்றுக்கு அரசு சம்மதம் தெரிவித்து உறுதி அளித்துள்ளது.

பேரணி

மாலை நேர மெழுகுவர்த்தி பேரணிக்கு அழைப்பு

போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், இந்த வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடும் வகையிலும், உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் நாடு முழுவதும் இன்று மாலை 6 மணியளவில் அமைதியான முறையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்துமாறு சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஜந்தர் மந்தரில் தொடர்ந்து நடைபெற்று வந்த இந்த மாணவர் இயக்கம், இந்திய டிஜிட்டல் மற்றும் களப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

தேர்வுமுறை சீர்திருத்தங்கள், சிபிஐ விசாரணை மற்றும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க அரசு உறுதியளித்துள்ள நிலையில், நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு போராட்டத்தைக் கைவிட்டு மாணவர்கள் தங்களது படிப்பில் கவனம் செலுத்துமாறு சிஜேபி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ADVERTISEMENT