சித்திரை திருவிழா தேரோட்டத்தில் இனிப்பு வழங்கிய இஸ்லாமியர் - மத நல்லிக்கணம்!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நடந்த சித்திரை திருவிழா தேரோட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் பக்தர்களுக்கு கேசரி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது. இரண்டாவது நாள் தேரோட்டத்தின் போது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக காதர் மைதீன் என்பவர் கேசரி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'தேரோட்டத்தின் போது முடிந்தளவு பக்தர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நானும் என் மனைவியும் நினைத்தோம். எனவே என்னால் முடிந்த சிறிய சேவையை செய்தேன்' என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரின் செயலுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.