டெல்லியில் சுவிட்சர்லாந்து பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்
டெல்லி திலக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் பின்புறம், கடந்த 20ஆம் தேதி கருப்பு நிற பையில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்து பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டது. உயிரிழந்த பெண், நினா பெர்கர் என கண்டறிந்த போலீசார், இந்த வழக்கில் குர்ப்ரீத் சிங்,30, என்பவரை கைது செய்து இருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த வழக்கு குறித்த பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. குர்ப்ரீத், சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது, டேட்டிங் செயலி மூலம், பெர்கர் உடன் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் பெர்கர் வேறு ஒருவரை காதலிப்பதாக சந்தேகம் கொண்ட குர்ப்ரீத், பெர்கரை இந்தியா வரவழைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய குர்ப்ரீத்
அதன்படி பெர்கரை அக்டோபர் 11ஆம் தேதி இந்தியா வர சம்மதிக்க வைத்துள்ளார். மேலும் பெர்கரை கொலை செய்ய அவரது பெயரிலேயே ஒரு காரையும் வாங்கி உள்ளார். சில நாட்கள் கழித்து பெர்கரை கொலை செய்து அந்த காரிலேயே வைத்து சுற்றி வந்துள்ளார். பின்னர் உடலில் இருந்து துர்நாற்றம் வரவே இரண்டு நாட்கள் கழித்து பெர்கர் பிணத்தை ரோட்டில் வீசி உள்ளார். போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, அதில் குர்ப்ரீத் ஓட்டி வந்த காரின் பதிவு எண்ணை கண்டறிந்து அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் போலீசார் குர்ப்ரீத் வீட்டில் இருந்து ₹2.25 கோடி கைப்பற்றி உள்ளனர்.
பிளாஸ்டிக் பையால் மூச்சுத் திணற வைத்து கொலை செய்த குர்ப்ரீத்
குர்ப்ரீத் முதலில் பெர்கரை கழுத்தை நிறுத்து கொலை செய்ததாக போலீசார் கருதினர். ஆனால் விசாரணையில் பிளாஸ்டிக் பையால் பெர்கர் முகத்தை மூடி, மூச்சுத் திணற வைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் பெர்கர் துடிப்பதை பார்த்து குர்ப்ரீத் மகிழ்ச்சியுற்றதாகவும், சில சமயங்களில் சிரித்ததாகவும் போலீசார் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெர்கர் 30 நிமிடம் உயிருக்கு போராடியதாகவும், பெர்கரின் பிதுங்கிய விழிகளை பார்த்து குர்ப்ரீத் சிரித்ததாக சம்பவம் குறித்து அறிந்தவர்கள் என்டிடிவியிடம் தெரிவித்ததாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.