தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்
தமிழக முதல்வர் அவ்வப்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைப்பது, மக்கள் தேவைகளை அறிவது போன்ற செயல்களை செய்து வருவது வழக்கம். இடையில் அவரது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி, பயணங்களை தவிர்த்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சுற்றுப்பயணமாக தனி விமானம் மூலம் இன்று திருச்சிக்கு செல்கிறார். அதன்படி, ரெஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் அரசு நலத்திட்டங்களை வழங்குவதோடு, மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடனுதவி, மணிமேகலை விருது மற்றும் மாநில அளவிலான வங்கியாளர்களுக்கு விருது வழங்கி பேசவுள்ளார், இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். மேலும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், தயார் நிலையில் உள்ள திட்டப்பணிகளை துவக்கி வைத்தல் முதலியவற்றை முதல்வர் மேற்கொள்ள உள்ளார்.
பயனாளிக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கிய தமிழக முதல்வர்
இதனையடுத்து, மணப்பாறையில் உள்ள செய்தித்தாள் காகித நிறுவனத்தில் உலகத்தரம் வாய்ந்த வன்மரக்கூழ் ஆலையை ஸ்டாலின் திறக்கவுள்ளார். இதனையடுத்து, மணப்பாறை சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் நிர்வாக அலுவலக கட்டடத்தையும் திறந்து வைக்கிறார், பின்னர் சன்னாசிப்பட்டியில் மக்களை தேடி மருத்துவம் என்னும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஒரு ஒரு கோடியாவது பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை வழங்கி சிறப்பிக்கிறார். இவ்வாறாக மேலும் சில நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள ஸ்டாலின் அவர்கள், மீண்டும் தனி விமான மூலம் சென்னை திரும்புகிறார். முதல்வர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளையும் அமைச்சர் கே.என்.நேரு பிரம்மாண்டமாக செய்து, அது குறித்த ஆய்வினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.