
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
கோயம்பேடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களின் வசதிகளை கருத்தில் கொண்டும் வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணி கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.
ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பில் 88.52 ஏக்கரில் 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன தொழில்நுட்பம் கொண்டு இந்த கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்குள் தனி காவல் நிலையம், பூங்கா உள்ளிட்டவைகளும் இடம்பெற்றுள்ளன.
ட்ஜ்கவ்க்
முதல்வர் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இதன் கட்டுமான பணிகள் முன்னதாகவே நிறைவடைந்த நிலையில், பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல ஏதுவாக வழிபாதைகள் அமைக்கும் பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை நடந்து வந்தது.
அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்த நிலையில், இன்று(டிச.,30) கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைக்க கிளாம்பாக்கம் வந்ததையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.
மேலும், முதல்வரின் வருகையை ஒட்டி பேருந்து நிலையம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சேகர் பாபு கடந்த 26ம் தேதி போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
#BREAKING வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #kilampakkambusstand #MKStalin #News18tamilnadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/hRT85laA51
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 30, 2023