Page Loader
ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில் 
பாலின ஈர்ப்பு என்பது தனிநபரின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு குணாதிசயம் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில் 

எழுதியவர் Sindhuja SM
Apr 19, 2023
07:35 pm

செய்தி முன்னோட்டம்

நகரங்களில் அதிகமானோர் கிளாஸட்டில்(closet) இருந்து வெளியே வருகிறார்கள் என்பதற்காக ஒரே பாலின திருமணங்களை "நகர்ப்புற உயரடுக்கின் கருத்துக்கள்" என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 19) தெரிவித்தது. ஒரே பாலின திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரும் மனுக்களின் வாதங்களை கேட்டபோது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இதை கூறினார். ஒரே பாலின திருமணங்களுக்கு உரிமை கோரும் மனுக்கள், தேசத்தின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அவை "நகர்ப்புற உயரடுக்கின் கருத்துக்களை" பிரதிபலிக்கின்றன என்றும் மத்திய அரசு சமீபத்தில் கூறி இருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய தலைமை நீதிபதி டிஒய்.சந்திரசூட் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

details

பாலின ஈர்ப்பு என்பது தனிநபரின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு குணாதிசயம்: தலைமை நீதிபதி 

"தனிநபரின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு குணாதிசயத்தின் அடிப்படையில் ஒரு தனிநபருக்கு எதிராக அரசு பாகுபாடு காட்ட முடியாது. நீங்கள் அதை உள்ளார்ந்த குணாதிசயமாக பார்த்தால், ​​​​அது "நகர்ப்புற உயரடுக்கின் கருத்து" என்ற வாதத்திற்கு புறம்பானது. ஒரே பாலின திருமணம் என்பது நகர்ப்புற உயரடுக்கின் கருத்து என்பதைக் காட்டுவதற்கு அரசாங்கத்திடம் எந்த தரவுகளும் இல்லை." என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார். இந்த விவகாரத்தை பற்றி உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. "அவர்களுக்கு உரிமைகளை வழங்குவது, அவர்களது உறவை அங்கீகரிப்பது, அத்தகைய உறவுக்கு சட்டப்பூர்வ புனிதத்தை வழங்குவது ஆகியவற்றை சட்டமன்றத்தால் மட்டுமே செய்ய முடியும், நீதித்துறையால் அல்ல" என்றும் மத்திய அரசு சமீபத்தில் கூறி இருந்தது.