பிறக்காத குழந்தைக்கு கவலை தெரிவித்த தலைமை நீதிபதி: கருக்கலைப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
கருவில் இருக்கும் குழந்தையின் வாழ்க்கைக்கும், அதை வளர்க்க முடியாது என்று கூறிய தாயின் வேண்டுகோளுக்கும் இடையே எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, அதற்கு கவலை தெரிவித்ததோடு, அதே நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டது.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளாலும், பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் வாதிட்டதை அடுத்து, நேற்று, உச்ச நீதிமன்றத்தின் ஒரு அமர்வு ஒரு தம்பதியரின் 26 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதித்தது.
சிக்னஸ்,ட
நாளை விசாரிக்கப்பட இருக்கும் கருக்கலைப்பு வழக்கு
ஆனால், இந்த விஷயத்தில் தலையிட்ட AIIMSஆல் உருவாக்கப்பட்ட மருத்துவக் குழு, குழந்தை ஆரோக்கியமாக உள்ளதால், கருக்கொலை(கருவின் இதயத்தை நிறுத்துதல்) செய்யப்படுவதற்கு முன் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தேவை என்று கூறியது.
அப்படி, குழந்தையின் இதயத்துடிப்பை நிறுத்தாமல் குழந்தையை வெளியே எடுத்தால், அந்த குழந்தை உயிருடன் தான் பிறக்கும் என்றும், அது கருக்கலைப்பு அல்ல, கொலையாக கருதப்படும் என்றும் மருத்துவக் குழு தெரிவித்தது.
மேலும், அப்படி உயிருடன் அந்த குழந்தை பிறந்தால்,குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதோடு, அது உடல் மற்றும் மன ஊனத்தை அந்த குழந்தைக்கு ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கின் தீவிரத்தை புரிந்துகொண்ட தலைமை நீதிபதி, இதை விசாரிக்க புதன்கிழமை(அக்-11) ஒரு அமர்வு அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார்.