மருத்துவர்கள் போராட்டம்: உடனடியாக பணிக்கு திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோள்
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை எதிர்த்துப் போராடும் மருத்துவர்களை பணிக்குத் திரும்புமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) வேண்டுகோள் விடுத்தார். மேலும் மருத்துவமனைகளால் போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளித்தார். "அவர்கள் அனைவரையும் பணிக்குத் திரும்ப விடுங்கள். நாங்கள் சில பொது உத்தரவை நிறைவேற்றுவோம். மருத்துவர்கள் மீண்டும் பணியைத் தொடங்கினால், எதிர்மறையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்துவோம். அவர்கள் பணியைத் தொடராவிட்டால், பொது நிர்வாக அமைப்பு எப்படி இயங்கும்?" என்று தலைமை நீதிபதி கூறினார். அதே நேரம், பொது மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் குறித்தும் நீதிபதி அதிருப்தியை வெளிப்படுத்தினார்.