Page Loader
தனது இரு மகள்களுடன் நீதிமன்றம் வந்த தலைமை நீதிபதி - நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம்
முதன்முறையாக குடும்ப உறுப்பினர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த சந்திரசூட்

தனது இரு மகள்களுடன் நீதிமன்றம் வந்த தலைமை நீதிபதி - நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம்

எழுதியவர் Nivetha P
Jan 07, 2023
05:18 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் இன்று தனது இரண்டு பெண்களை அழைத்துக்கொண்டு உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர்களை இதுவரை நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வராத சந்திரசூட் இன்று அழைத்து வந்தது நீதிமன்றத்தில் இருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சந்திரசூட் மனைவி ராஷ்மி சந்திரசூட் 2007ம் ஆண்டு மறைந்தார், இதனையடுத்து அவர் கல்பனா தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் மகி மற்றும் பிரியங்காவை இவர்கள் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் தனது மகள்களுடன் நீதிமன்றத்திற்கு வந்த சந்திரசூட் அறை 1'க்கு அழைத்து சென்றார்.

மகள்கள்

உச்சநீதிமன்றத்தை சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டதால் இரு மகள்களையும் அழைத்து வந்த தலைமை நீதிபதி

நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கிய அவர், நீதிபதிகள் இருக்கும் சேம்பர்கள், வழக்கறிஞர்கள் வாதம் முன்வைக்கும் இடம் முதலியவற்றை சுற்றிக்காட்டி தெளிவாக எடுத்துரைத்தார். உச்சநீதிமன்றத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் என்று மகள்கள் ஆசைப்பட்டதால் சந்திரசூட் அவர்களை அழைத்து வந்துள்ளார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகிறது. உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் 9ம் தேதி பதவியேற்ற டி.ஒய்.சந்திரசூட், சபரிமலை வழக்கு, ராமர் கோயில் வழக்கு போன்ற முக்கிய வழக்குகளின் தீர்ப்பினை அளித்த அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்றிருந்தார். இவரது தந்தையும் தலைமை நீதிபதியாக இருந்தவர் தான். இதனை தொடர்ந்து வரும் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக சந்திரசூட் அவர்கள் பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.